அசாம் மாநிலம் கவுகாத்தியில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அசாமின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும், மேலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கவுகாத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.