தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் மாணவர்கள் நோய்வாய்ப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளியின் அருகே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில், குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன.
இதனால் ஏற்படும் புகைமூட்டம், அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் வருவதால், மாணவர்களுக்கு மூச்சுத்திணறல், சுவாச கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.