கூகுள் குரோமை சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டெக் நிறுவன உரிமையாளர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் முன்வந்துள்ளார்.
31 வயதான அரவிந்த் ஸ்ரீநிவாஸ், சென்னையில் பிறந்தவர். சென்னை ஐஐடியில் பிடெக், எம்டெக் பட்டம் பெற்ற இவர் முன்பு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றியவர். தற்போது Perplexity a.i. நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில், அமெரிக்காவில் டிக்டாக் உடன் இணைந்து செயல்பட முன்வந்திருந்தது. த
ற்போது அந்நிறுவனம் கூகுள் குரோமை சுமார் 3 லட்சம் கோடிக்கு வாங்க முன்வந்துள்ளது. மேலும் அமெரிக்கச் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தை முடக்க எலான் மஸ்க் திட்டமிட்ட போது முடிந்தால் அதைச் செய்து காட்டுமாறு சவால் விட்டவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.