ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவ முயன்றபோது நடந்த துப்பாக்கிச்சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணமடைந்தார்.
உரி செக்டாரில் நேற்றிரவு ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறித் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் அதற்குத் தக்க பதிலடி கொடுத்தது.
எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலையைப் பயன்படுத்தி ஊடுருவல் முயற்சி நடைபெற்ற நிலையில், அதனை நமது பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.