சிவகங்கை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காளையார் கோவில் அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ஜான் பால். இவருக்கு வேலையில்லாத காரணத்தால் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவகங்கை ரயில் நிலையத்தில் மாலை நேரத்தில் நின்று கொண்டிருந்த அவர், ராமேஸ்வரம் – தாம்பரம் விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் அவரது கை துண்டாகி, ரயில் எஞ்சினுக்கு கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட ஓட்டுநர், ரயிலை நிறுத்தியதும், பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார், டேவிட் ஜான் பாலை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக சுமார் 1 மணி நேரம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.