ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் `கூலி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `கூலி’ திரைப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர் கான், சௌபின், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். கூலி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகும் நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், இப்படத்தை முழு சுதந்திரத்துடன் எடுக்க தனக்கு வாய்ப்பளித்த ரஜினிகாந்த்திற்கு என் மனமார்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தை இன்னும் மறக்க முடியாததாக மாற்றிய படக்குழுவினருக்கு நன்றி எனக் கூறியுள்ள லோகேஷ் கனகராஜ், கூலி படமானது முழுக்க முழுக்க ரஜினிகாந்திற்கான படம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.