ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், கும்பகோணம் வாசு திரையரங்கில் குவிந்த ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் இன்று வெளியாகிறது. திரைப்படத்தை கொண்டாடும் விதமாக கும்பகோணத்தில் உள்ள வாசு திரையரங்கில் குவிந்த ஏராளமான ரசிகர்கள், டிஜே இசையுடன் ஆட்டம் போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மட்டும் 980 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் “கூலி” திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
















