திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஷ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.15 மணிக்கு கொடிமரத்திற்கு பால், பழம், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து, கொடிமரத்தில் திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வரும் 20ஆம் தேதி சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 21ஆம் தேதி பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளிகிறார். மேலும், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23ஆம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது.