பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது.
4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், மொத்தம் 96 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டிக்கு தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.