மதுரை மாவட்டம் மேலூரில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழாவையொட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பூ தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பக்தர்கள் பலர் அலகு குத்தி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து நாகம்மாள் தேவிக்கு பாலாபிஷேகமும் சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. விழாவையொட்டி, மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டது.