பாரதத் திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி இளையராஜா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பல்லாயிரத் தாண்டு வாழ்கவே! “பாரதத்தின் பத்மவிபூஷண்”, “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத” இசைப் பேரரசன், “இசைஞானி” இளையராஜா, எம்.பி. அவர்களை, அவரது ஒலிப்பதிவு கூடத்தில் இன்று சந்தித்தேன். வாழ்த்து பெற்றேன். மட்டில்லா மகிழ்ச்சியுற்றேன் என தெரிவத்துள்ளார்.
சமீபத்தில் நடந்தேறிய மாமன்னன் இராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில், அன்னார் பொழிந்த “சிவனிசை” மழையில் நனைந்த பாரதப் பிரதமர், தனது மெய்யுருகி, ஆனந்தத்தில் கைதட்டி மகிழ்ந்தது என் நினைவில் நீங்காப் பதிவாக இன்று வரை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏழு ஸ்வரங்களை தனது சுவாசமாக, தெய்வீகத்தையும், தேசியத்தையும் தன் உயிராகவும் உணர்வாகவும் கொண்ட ஒரு பெருமைமிக்க இந்தியன்! பாரதத் திரை இசை உலகின் தேசிய கீதம் அவர்! இசை பட பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத் தாண்டு பெருவாழ்வு வாழ வணங்கி வாழ்த்துகிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.