கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
கடலூர் மாநகராட்சியில் சிட்டி கிளீன் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், 350க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியை மேற்கொள்வதாகவும், ஊதியத்தை கேட்டால் இழிவாக பேசுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.