தேசப்பிரிவினை நினைவு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் புகைப்பட கண்காட்சியை ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தின் நினைவாக ஆண்டு தோறும் ஆகஸ்ட் 14ம் தேதி தேசப்பிரிவினை நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் இது தொடர்பான புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை, ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அப்போது புகைப்படங்கள் தொடர்பான விளக்கங்களை மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.