விஜய் ஆண்டனி நடித்துள்ள ’சக்தி திருமகன்’ திரைப்படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அண்மையில் வெளியான மார்கன் படமும் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனிடையே விஜய் ஆண்டனியின் 25வது படமாக உருவாகி உள்ள சக்தி திருமகன், அரசியல் கதையாக உருவாகி உள்ளது.
இப்படத்தின் டீசர், 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. செப்டம்பர் 5ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 19ம் தேதி வெளியாகும் என விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.