தமிழகத்தில், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் 7 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் அடிப்படை தமிழ் தேர்வில் தோல்வி அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், 38 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு வரை 16 லட்சத்து 7 ஆயிரத்து 995 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அதில், அடிப்படை கல்வி தெரியாதவர்கள் எனக் கண்டறியப்பட்ட, 8 லட்சத்து 2 ஆயிரத்து 214 மாணவர்களுக்குத் திறன் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், கணித பாடங்கள் அடிப்படையில் நடைபெற்ற தேர்வில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 683 மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.
இதன் மூலம் தமிழகத்தில், 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில், 45.38 சதவீதம் பேருக்கு அடிப்படை கல்வி கூட தெரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.