சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, வாயில் கருப்பு துணி கட்டி, கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தம்மம்பட்டி பேரூராட்சி மன்ற தலைவியாக திமுகவைச் சேர்ந்த கவிதா என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பேரூராட்சி மன்ற கூட்டத்தைப் புறக்கணித்த கவுன்சிலர்கள், பேரூராட்சி மன்ற தலைவி கவிதா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
மேலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பேரூராட்சி அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து, வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவிலும் ஈடுபட்டனர்.