ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கூலி படத்தின் டிக்கெட் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் வெளியாகி உள்ள கூலி திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் கள்ளச்சந்தையில் கூலி திரைப்படத்தின் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
190 ரூபாய் விலையுள்ள டிக்கெட், 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்குத் திரையரங்கு ஊழியர் மற்றும் மேலாளர் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேபோன்று, தாம்பரம் வித்யா திரையரங்கில் 190 ரூபாய் விலை கொண்ட டிக்கெட்டை ஆயிரத்து 600 ரூபாய்க்கு ஊழியர் விற்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
திரையரங்கு கவுண்டரில் பல மடங்கு விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.