டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதி கவாயிடம் விலங்கின ஆர்வலர்கள் முறையிட்டனர்.
இதனைப் பரிசீலனை செய்வதாகத் தலைமை நீதிபதி கவாய் உறுதியளித்த இந்நிலையில், 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்வி அஞ்சனேரியா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.