சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியக் கைத்தறி தொழில்நுட்பக் கழக மாணவ-மாணவியர் கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்தினர்.
மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டையில் இயங்கி வரும் இந்தியக் கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தில் சுதந்திர தினத்தையொட்டி கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகக் கைத்தறி துணிகளைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்களைச் செய்யும் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்தினர்.