மதுரை மாநகர் பகுதியில் நடந்து சென்ற வியாபாரி உள்ளிட்ட இருவரை வெறிநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் மதுரை நேதாஜி சாலையில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் பொருட்களை வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய், இஸ்மாயிலை துரத்திச் சென்று கடித்துள்ளது. அதேபோலே, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரையும் வெறிநாய் கடித்தது.
ஒரே நாளில் அடுத்தடுத்து இருவரை வெறிநாய் கடித்ததால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்தனர். மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.