அல்பேனியாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி கருகிச் சேதமடைந்துள்ளன.
வ்லோரா பிராந்தியத்தில், ஃபினிக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீயை அணைக்கும் பணியில் ராணுவம், தீயணைப்புத் துறை, தன்னார்வலர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே காட்டுத்தீயைச் சமாளிக்க அல்பேனியாவும் பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடியுள்ளன.