பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
வடக்கு பாகிஸ்தானில் கில்கிட் பால்டிஸ்தானின் டான்யொர் நகரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது அங்கு நீர் விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 26 முதல் நாடு முழுவதும் மழை தொடர்பான விபத்துக்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.