கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விஜயகாந்த் கட்டிய பாலத்தில் விழுந்து வணங்கினார்.
மேலும், விஜயகாந்த்தின் புகைப்படத்திற்கு முத்தமிட்டார். இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர்கள் விஜயகாந்த்துக்கு வழங்கிய ரதத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தற்போது கட்டப்படும் பாலங்கள் ஒரு மழைக்கே இடிந்து விடுவதாகவும், விஜயகாந்த் கட்டிய பாலம் கம்பீரமாக நிற்பதாகவும் கூறினார்.