கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதுடன், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் எம்எல்ஏ ஜெயராமன் தலைமையிலான அதிமுகவினர், பாஜகவினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்துக்கு எதிரான பதாகைகளைக் கையில் ஏந்தியபடி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.