ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, மக்கள் பயன்படுத்தி வந்த பொதுவழிப் பாதையைத் தனிநபர் ஆக்கிரமித்தது குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேராவூர் பஞ்சாயத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை, 2 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர்கள் ஆக்கிரமித்து அடைத்தனர்.
இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வர வசதி இல்லாமலும், பேருந்து வர வழி இல்லாமலும் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கும் மக்கள், திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.