பாஜக சார்பில் நடத்தப்படும் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி என்ற விழிப்புணர்வு பேரணியைத் திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
79 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி என்ற தேசப்பற்றுள்ள யாத்திரையை நாடு முழுவதும் பாஜக நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி பகுதியில் விழிப்புணர்வு யாத்திரை நடத்தப்பட்டது.500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன் அங்கிருந்த காமராஜர் சிலை மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து விழா மேடையில் பேசிய அவர், உலகெங்கிலும் வல்லமை மிக்க நாடாக இந்தியா விளங்கி வருவதாகவும், சில ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் முதன்மையான நாடாக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.