பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி கராச்சியில் நடந்த கொண்டாட்டத்தின் போது, வான்வழியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதுபோன்ற தினங்களில் பாகிஸ்தானியர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடுவது வழக்கம்.
கராச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது 8 வயது சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.