தொழிலதிபரிடம் 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெஸ்ட் டீல் டிவி எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர்.
இந்நிறுவனத்திற்குத் தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர் 2015 – 2023 காலகட்டத்தில் 60 கோடியே 48 லட்சம் கோடி கொடுத்துள்ளார்.
ஆனால், அவர்கள் இருவரும் இந்தப் பணத்தை தங்களின் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜூஹு காவல் நிலையத்தில் கோத்தாரி அளித்த புகாரின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.