'100 அடி' ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!
Sep 28, 2026, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 06:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பனிப்பாறை சரிவால் அலாஸ்கா கடற்கரையை 100 அடி உயரச் சுனாமி தாக்கிய நிலையில், இதுபோன்ற பல நிலச்சரிவுகள் மக்கள் வசிக்கும் நகரங்களைத் தாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

அமெரிக்காவின் தென் கிழக்கு அலாஸ்காவில் உள்ள தெற்கு சாயர் பனிப்பாறை அருகே, கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு அப்பகுதியில் ஒரு சக்திவாய்ந்த சுனாமி ஏற்படக் காரணமாக அமைந்தது. சுமார் 100 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள், அலாஸ்கா கடற்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார தீவுகளில் பெரும் சேதத்தை விளைவித்தன.

ஜூனாவில் இருந்து தென் கிழக்கே சுமார் 60 மைல் தொலைவில் உள்ள “எண்டிகாட் ஆர்ம்” பகுதியில் நடந்த இந்த நிகழ்வு, 2015-ம் ஆண்டுக்குப் பின் அலாஸ்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமி என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக நூற்றுக்கணக்கான மில்லியன் கியூபிக் மீட்டர் பரப்பளவு கொண்ட பாறைகள் கடற்பரப்பில் சரிந்து, பரந்த அளவிலான கடல் நீரை இடம்பெயர்த்து சுமார் 75 மைல்களுக்கு மேல் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு ஒரு அரிய மற்றும் பயங்கரமான புவியியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான சிறிய அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுனாமி கடற்கரை பகுதியில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியிருந்தாலும், உட்கட்டமைப்புகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனத் தேசிய வானிலை சேவை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமவெளியின் மேற்பரப்பில் மண் சிதைவால் ஏற்படும் பொதுவான நிலச்சரிவுகளைப் போல் அல்லாமல், இந்த நிகழ்வில் பரந்த பாறைகள் சரிந்து அலை நீருடன் மோதியுள்ளன. ஏற்கனவே அலாஸ்கா மாகாணத்தில் ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமிக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்திருந்த நிலையில், தற்போது பெரும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த சுனாமி, இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் வரவுள்ள ஆபத்துகளுக்கான சமிக்ஞை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எதிர்கால ஆபத்துகளைக் கண்டறியும் ஆய்வுகளை மேம்படுத்த இது உதவும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது மக்கள் தொகை குறைந்த தொலைதூர பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருந்தாலும், வருங்காலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட கடற்கரை நகரங்களிலும் இதுபோன்ற நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: Beach shaken by '100-foot' tsunami: Sudden landslide that startled people'100 அடி' ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரைதிடீர் நிலச்சரிவு
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

Next Post

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies