உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் - சிறப்பு கட்டுரை!
Sep 23, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 8, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து ஜெட்டாவில் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் பாதுகாப்பு, உளவுத்துறை பகிர்வு மற்றும் ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய ‘இஸ்லாமிய நேட்டோ’ கூட்டணியாகக் கருதப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்தாண்டு பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனைத் தொடக்கமாக வைத்து சர்வதேச அளவில் ‘இஸ்லாமிய நேட்டோ’ என்று விவரிக்கப்படும் ஒரு புதிய வியூகக் கூட்டணி உருவாகிறது என்று கூறப்பட்டது.

இந்தப் பாதுகாப்புக் கூட்டணியில் மற்ற மேற்கு ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளையும் இணைப்பதில் பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் ஆர்வம் காட்டி வருவதாக கடந்த பல மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

அமெரிக்கா-ஈரான் போரால் வளைகுடா நாடுகளும் கடும் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளன. நாட்டின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ள நிலையில் ஹார்முஸ் மற்றும் செங்கடல் வழியாக நடைபெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தும் சீர்குலைத்துள்ளது.

இதன் விளைவாக பாதிப்புக்குள்ளான வளைகுடா நாடுகள் தங்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளன.

இதற்காக நேட்டோ கூட்டணி போல ஒரு இஸ்லாமிய கூட்டணி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் விவாதங்களும் நீண்ட காலமாகவே நடந்து வந்துள்ளது.

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கும் செயல்முறையை விரைவுபடுத்தி வந்தன.

அரசுமுறை பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் அந்நாட்டுத் துணைப் பிரதமர் இஷாக் தார் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து இருநாடுகள் இடையேயான எதிர்கால பாதுகாப்பு உறவுகள் குறித்தும் விவாதித்துள்ளனர்.

ஏற்கெனவே செங்கடல் வழியாக சென்ற சவூதியின் கப்பலை ஹௌதிகள் தாக்கியதையடுத்து,சவூதியின் கடல்வழி பாதுகாப்புக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் முயற்சியெடுத்து வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா முன்னெடுத்துள்ள பாதுகாப்பு கூட்டணியில் துருக்கியும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கூட்டணிக்கான அனைத்து அடிப்படை விதிமுறைகளும் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தான், சவுதி மற்றும் துருக்கி தலைவர்களிடையே பரிமாறப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக துருக்கியின் மூத்த உளவுத்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர்ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் ஜெட்டாவில் சந்தித்து மிக முக்கியமான மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு கட்டமைப்பை அடிப்படையிலேயே மாற்றியமைக்கக்கூடிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி, சவூதி அரேபியா நிதி உதவி வழங்கும் என்றும், பாகிஸ்தான் தனது அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன் மற்றும் மனிதவளத்தை வழங்கும் என்றும், ராணுவ வல்லமை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைத் துருக்கி வழங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே சவூதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், கவசப் படை, பீரங்கிப் படை, காலாட்படை மற்றும் ஏவுகணைப் பிரிவுகள், அத்துடன் இரண்டு விமானப்படைப் படைப்பிரிவுகள் மற்றும் இரண்டு கடற்படைத் தொகுதிகள் ஆகியவற்றின் ஆதரவுடன் சுமார் 25,000 வீரர்களை சவுதி அரேபியாவில் நிலைநிறுத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

தனது சொந்த நலன்களுக்கும் இஸ்ரேலின் நலன்களுக்கும் மட்டுமே அமெரிக்கா முன்னுரிமை அளித்து வரும் நிலையில் சர்வதேச பாதுகாப்பு வியூகத்தை இந்த மூன்று நாடுகளும் உருவாக்கியுள்ளன.

 

Tags: iran warsecurity alliance.Islamic NATOStrait of HormuzIran-US wariran war newsus iran war liveiran war updatepakistaniran war latestturkeyisrael us iran warMiddle East.america vs iran warJeddahaudi Arabia
Share
Tweet
SendShare
Previous Post

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

Next Post

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies