மருத்துவத் துறையில் தன்னிறைவு - நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை - சிறப்பு கட்டுரை!
Sep 23, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 8, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்கேன் செய்வதற்கான செலவை 70 சதவீதம் குறைக்கும் திறன் கொண்ட இந்தியாவின் முதல் MRI இயந்திரத்தை பெங்களூரைச் சேர்ந்த ‘Voxelgrids’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கி வருகிறது; இந்நிறுவனத்தை ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கைப்பற்றும் முயற்சியிலிருந்து டாடா மற்றும் வேம்புவின் ‘Zoho’ நிறுவனங்கள் எவ்வாறு காப்பாற்றின? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலக அளவில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா, இத்தாலி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளே MRI தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகள் பயன்படுத்தும் MRI இயந்திரங்களை இந்த நாடுகளின் ஒரு சில பெரு நிறுவனங்களே தயாரித்து விநியோகம் செய்து வருகின்றன.

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருக்கும் ஒவ்வொரு எம்.ஆர்.ஐ ஸ்கேனரும் இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

கடந்த ஆண்டில் மட்டும், சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது சுமார் 5,000 எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் மட்டுமே உள்ளன

சராசரியாக ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ய கிட்டத்தட்ட 10,000 ரூபாய் செலவாகும் நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாத ஒரு மருத்துவச் செலவாகவே உள்ளது.

நோயறிதல் பரிசோதனைக்கு மிகவும் தேவை என்ற அவசியம் காரணமாக எல்லா மருத்துவ மனைகளும் சி.டி ஸ்கேனர் வாங்கும் போதே எம்.ஆர்.ஐ ஸ்கேனையும் வாங்க விருப்பம் காட்டிவருகின்றன.

இந்தியாவில் எம்ஆர்ஐ -யை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான சிடி ஸ்கேனர்கள் உள்ளன. இதற்கு இறக்குமதி செய்யப்படும் எம்ஆர்ஐ கருவிகளை வாங்குவதற்கும், நிறுவுவதற்கும், பராமரிப்பதற்கும் செலவு அதிகமாகிறது என்பதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்தச் சூழலில் மருத்துவத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு நோக்கிய நாட்டின் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக பெங்களூரைச் சேர்ந்த ‘Voxelgrids’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்தியாவின் முதல் MRI இயந்திரத்தை உருவாக்கி வருகிறது.

MRI ஸ்கேன் செலவை சுமார் 70 சதவீதம் குறைப்பதோடு, மேம்பட்ட மருத்துவப் பரிசோதனை வசதிகளை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த MRI இயந்திரம் 40 சதவீத குறைந்த விலையிலும், 50 சதவீத குறைவான எடையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மென்பொருள் முதல் மின்னணுவியல் வரை அனைத்தும், வெறும் நான்கு பொறியாளர்களிலிருந்து தற்போது 33 ஆக வளர்ந்துள்ள ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் நிறுவனத்திற்குள்ளேயே முழு இயந்திரமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான MRI அமைப்புகளில் காணப்படும் கேபிள்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கையே பயன்படுத்தும் இந்த MRI இயந்திரம் மின்னணு பேக்கேஜிங்கில் கணிசமாகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.

மிக முக்கியமாக, உலகின் மிகவும் விலையுயர்ந்த, புதுப்பிக்க முடியாத வாயுக்களில் ஒன்றான ஹீலியத்திற்குப் பதிலாக நைட்ரஜனைப் பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. இந்த ஹீலியத்தைத்தான் MRI இயந்திரங்களுக்காக இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனமும் ஒரு கட்டத்தில் பணத்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் என்பதற்கு ஏற்ப Voxelgrids-வோக்சல்கிரிட்ஸ் நிறுவனத்துக்கும் முதலீட்டுத் தேவை ஏற்பட்டதாக அதன் நிறுவனர் அர்ஜுன் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டுவரும் சிறிய உற்பத்தியாளர்களை விழுங்கி, தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பல பன்னாட்டு நிறுவனங்கள் Voxelgrids-யையும் அணுகி கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சலுகையை முன்வைத்ததாக கூறியுள்ளார்.

ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்வது, தான் உருவாக்க முயன்ற அந்தப் புதுமையான தொழில்நுட்பத்தையே இழக்க நேரிடும் என்பதால் அந்த சலுகையை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துள்ளதாக அர்ஜுன் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

மேலும் ரத்தன் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோரின் நிதி உதவியே இந்தியாவின் முதல் உள்நாட்டு MRI ஸ்கேனரை உருவாக்கும் வரை தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிலைத்திருக்க செய்ததாக அருணாசலம் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘தேசிய பயோஃபார்மா மிஷன்’ (National Biopharma Mission) மூலம் கிடைத்த அரசு நிதி, இந்தத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உதவியதாகவும் கூறியுள்ளார்.

வோக்சல்கிரிட்ஸ் நிறுவனம் தற்போது தனது பெங்களூரு ஆலையில் ஆண்டுக்கு 20 முதல் 25 எம்.ஆர்.ஐ ஸ்கேனர்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

12 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள இந்த 1.5-டெஸ்லா எம்.ஆர்.ஐ ஸ்கேனர், “நாக்பூர்” அருகே உள்ள சந்திராபூர் புற்றுநோய் பராமரிப்பு அறக்கட்டளையில் நிறுவப்பட்டுள்ளது.

செலவுகளைக் குறைத்து, அணுகலை மேம்படுத்தி, உள்நாட்டுப் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம், இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள நோயறிதல் சார்ந்த சுகாதார சேவைகளை மாற்றியமைக்கும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

Tags: CT scanners.Tata GroupVoxelgridsfirst MRI machineVembu’s 'Zoho'
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

Next Post

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies