கோவை ஈச்சனாரியில் நடைபெறும் சுதேசி கண்காட்சியில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த புத்தக ஸ்டால் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்திய ராணுவ நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் எழுதியுள்ள புத்தகம், வரும் 10ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதன் அறிமுக ஸ்டால், கோவை ஈச்சனாரி பகுதியில் சுதேசி எக்ஸ்போ கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த வரலாற்றையும், அதன் பின்னணி மற்றும் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தகம் வரும் 10ம் தேதி முதல் விற்பனைக்கு வருவதாகவும் கூறியுள்ளார்.
















