இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரி கோரிமேடு காவல்துறை திடலில் இன்று நடைபெறும் காவல் துறையின் குடியரசுத் தலைவர் வண்ணக் கொடி விருது வழங்கும் நிகழ்வில் அமித் ஷா பங்கேற்கிறார். இதையொட்டி பாதுகாப்புப் பணியில் சுமார் 1,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
















