பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு தனது இறையாண்மை முடிவின்படி தன்னிச்சையாகவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியவர்,
இந்தியா ஒருபோதும் நடுவர் நீதிமன்றத்தின் சட்டபூர்வமான தன்மையை ஏற்றதில்லை என்றும் நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அதிகார வரம்பற்றவை, சட்டப்பூர்வ நிலைப்பாடு இல்லாதவை என்றும் அதன் தீர்ப்பு இந்திய நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் 27-ல் இந்தியாவால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, பஹல்காம் தாக்குதல் உட்பட, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது என்றும் இந்திய அரசாங்கத்தின் இறையாண்மை முடிவால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.