இந்தியாவின் கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் அதிக உள்கட்டமைப்பு முதலீடு ஆகியவை நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் என S&P குளோபல் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து S&P குளோபல் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் நீண்டகால கடன் மதிப்பீடு BBB மைனஸிலிருந்து BBB ஆகவும், குறுகிய கால கடன் மதிப்பீடு A-3 இலிருந்து A-2 ஆகவும் மேம்படுத்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் அதிக உள்கட்டமைப்பு முதலீடு ஆகியவை நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது
இதனை நிலையான எதிர்காலம் பிரதிபலிக்கிறது என குறிப்பிட்டுள்ள S&P குளோபல் மதிப்பீட்டு நிறுவனம், தங்களது மதிப்பீடுகள் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஆதரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் S&P குளோபல் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட மதிப்பீட்டை மத்திய நிதி அமைச்சகம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதி அமைச்சகம், இந்த மதிப்பீடு மேம்படுத்தல் 18 வருட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் உண்மையிலேயே சுறுசுறுப்பாகவும், மீள்தன்மையுடனும் இருப்பதையே S&P குளோபல் மதிப்பீட்டு நிறுவனத்தின் கருத்து உறுதிப்படுத்துகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.