பெரம்பலூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி திமுக எம்பி அருண் நேருவை பெண்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில் 4 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மேம்பாட்டு திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க திமுக எம்பி அருண் நேரு வருகை தந்தார்.
அப்போது, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் தங்கள் பகுதியில் இல்லையெனக் குற்றஞ்சாட்டி, திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய திமுக எம்பி அருண் நேரு, எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனை தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பெண்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.