79-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தேசியக் கொடி ஏற்றினார்.
மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில், நாடு வலுவான மற்றும் முன்னணி பொருளாதாரமாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டார். மேலும், உலகில் நிலையற்ற தன்மை மற்றும் பொருளாதார சிக்கல்கள் நிலவி வரும் சூழலில், இந்தியா பொருளாதாரத்தில் முன்னணியில் இருப்பதாக ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என நயினார் நாகேந்திரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், போதையில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.