பெரம்பலூரில் பள்ளி குழந்தைகளை அழைக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்மாபாளையத்தை சேர்ந்த ரவி என்பவர், வழக்கம் போல பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல ஆட்டோவில் வந்த போது வழிமறித்த 2 பேர், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.