கவுதம் கார்த்திக் நடிக்கும் ரூட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கடல் படத்தின் மூலம் நடிகர் கவுதம் கார்த்திக் அறிமுகமானார். அவர் நடித்த வை ராஜா வை, ரங்கூன், பத்து தல உள்ளிட்டவை அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய சூரிய பிரதாப் இயக்கத்தில், கிரைம் திரில்லர் படமாக ரூட் என்ற படம் உருவாகி வருகிறது.
கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த ஜூலை மாதம் நடந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.