இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றுவோம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் தேசியக் கொடியை ஏற்றினார்.
சுதந்திர தினத்தையொட்டி அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று மத்திய அமைச்சர் எல். முருகன் தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தியாகம், அமைதி மற்றும் நாட்டின் வளம் போன்றவற்றை குறிக்கின்ற நமது தேசியக் கொடியினை, சென்னையில் உள்ள எனது இல்லத்தில் ஏற்றி மரியாதை செலுத்தினேன்.
மேலும், பாரதப் பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. நாட்டு மக்கள் அனைவரும், அவர்தம் இல்லங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துவோம் என்று எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.