அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியச் சுதந்திரத்தில் பெண்களின் சக்தி முக்கிய பங்காற்றியதாகத் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, எதிரி மண்ணுக்குள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தைத் தரைமட்டமாக்கியதாகவும் அவர் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்வதாகக் கூறிய பிரதமர், 10 ஆண்டுகளாக நடக்காத ஒன்றை இந்திய ராணுவம் நடத்திக் காட்டியதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
எதிரிகள் மீண்டும் முயன்றால் எங்கும், எப்போதும் தாக்குதல் என்பதை நமது படைகள் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிந்து நதிநீரை முழுமையாகப் பயன்படுத்தும் உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே உள்ளது என்றும், தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக ஓடும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்க முடியாது எனவும் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.