79-வது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களுக்குப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, 500 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.