சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், தகைசால் தமிழர் விருதை காதர் மொகிதீனுக்கும், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை இஸ்ரோ தலைவர் முனைவர் நாராயணனுக்கும் வழங்கி கௌரவித்தார்.
மேலும், இறகுப் பந்து போட்டியில் பதக்கங்களைக் குவித்த துளசிமதி முருகேசனுக்கு, வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.