விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்குக் கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரகண்டநல்லூர் அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தில் கஞ்சா அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர் முருகன், காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த தினேஷ் என்ற கஞ்சா வியாபாரி, ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தனது புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள ஊராட்சி மன்ற தலைவர், புகார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.