விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுதந்திர தின விடுமுறையையொட்டி வழக்கத்தை விட கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
300 ரூபாய் சிறப்புத் தரிசன முன்பதிவு செய்த பக்தர்கள் 3 முதல் 5 மணி நேரமும், இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் ஏழு மணி நேரமும் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அலைமோதிய பக்தர் கூட்டத்தால் 4 கிலோ மீட்டர் தூர வரிசையில் இலவச தரிசனத்திற்காகப் பக்தர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.