காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பார்ப்பதற்கு ரம்மியமாகக் காட்சியளித்தாலும், இமயமலையால் அதனை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு எப்போதும் பேராபத்து இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. காரணம், பெருகி வரும் காலநிலை மாற்றம். புவி வெப்பமடைதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அது இமயமலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
AGU ADVANCES என்ற நிறுவனம் இமயமலையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அதீத வெப்பத்தால் இமயமலையில் இருக்கும் பனிப்பாறைகளின் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான தண்ணீர் சிந்து நதியில் கலப்பதால், அது பயணிக்கும் மாநிலங்கள் எல்லாம் பாதிப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மனிதர்கள் இயற்கையைப் பேணி பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் அதன் கோரதாண்டவத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.