நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80) இன்று காலமானார்.
பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன், தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் மறைவுக்கு, தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.