நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி அட்டாரி – வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது எல்லை பாதுகாப்பு படையினர் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அங்கு குழுமியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினர்.
பின்னர் நாட்டின் முப்படையை சேர்ந்த வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை கண்டுரசித்த மக்கள், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என கோஷங்களை எழுப்பி மகிழ்ந்தனர்.