மலையாள திரைப்பட சங்க வரலாற்றில் முதல் முறையாக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மலையாள திரையுலக கலைஞர்களின் நலனுக்காக Association of Malayalam movie artists என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. மலையாள திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்த அறிக்கை வெளியானது.
அதில் பெண் கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டதால் பிரச்னை பூதாகரமானது. இதையடுத்து அம்மா அமைப்பின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். உறுப்பினர்களும் ராஜினாமா கடிதங்களை கொடுத்த காரணத்தால் அம்மா அமைப்பின் செயற்குழு கலைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்நது மலையாள திரைப்பட சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில், பெண்கள் முக்கிய பொறுப்புகளை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக ஸ்வேதா மேனனும், பொதுச்செயலாளராக குக்கு பரமேஸ்வரனும் வெற்றி பெற்றுள்ளனர்.