கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாழ்க்கையில் எதிர்மறை சூழ்நிலைகளில் மன உறுதியும், தெளிவும் பெற பகவத்கீதை என்ற வழிகாட்டலை வழங்கியவர் கிருஷ்ண பகவான் எனத் தெரிவித்துள்ளார்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, தீயவைகள் அழிந்து, நன்மைகள் பெருக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பகவான் கிருஷ்ணரின் பொற்பாதங்கள் அனைவரின் இல்லங்களிலும் தவழ்வதற்காக வேண்டிக் கொள்வதாகவும், அனைவருக்கும் மனமார்ந்த கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
நெல்லையில் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.